Show all

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்! கட்டுப்பாட்டு வங்கி அறிவிப்பு

வரும் ஞாயிற்றுக் கிழமை வங்கிகள் செயல்படும் என்றும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் இயங்கலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 அன்று (31.03.2019) வங்கிகள் மற்ற நாட்களைப் போல் வழக்கமாக செயல்படும் என கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. அன்று நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஆகும். அதனால் இதையொட்டி அனைத்து துறை நிறுவனங்களும் தங்களது வரவு செலவு கணக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதனால், அன்று விடுமுறை விடப்பட்டால், அரசுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், வருகிற ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது.

மேலும் அதில் சனிக்கிழமை இரவு 8 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரையிலும், வங்கிகளை  திறந்து வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளையும், கட்டுப்பாட்டு வங்கி வலியுறுத்தியுள்ளது. மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும், இயங்கலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,106.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.