Show all

இணையத்தில் தீயாக நையாண்டிகள்! மிசன்சக்தி பேச்சு: காபந்து தலைமைஅமைச்சர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நற்சான்று

மிசன் சக்தி விவகாரம் குறித்து காபந்து தலைமைஅமைச்சர் மோடி பேச்சு- தேர்தல் நன்னடத்தையை மீறிய செயல் அல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சில நாட்களுக்கு முன் மிசன்சக்தி என்ற பெயரில் செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது. அப்போது 3 நிமிடங்களில், 300 கி.மீ. உயரத்தில் உள்ள, இந்தியாவிற்கு சொந்தமான செயற்கைகோள்; ஒன்று சோதனைக்காக அழிக்கப் பட்டது. 

நாடளுமன்றத் தேர்தல் நேரத்தில், காபந்து தலைமை அமைச்சர் மோடி, பிற்பகல் தான் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தகவல் அறிவிக்கவிருப்பதாக ஒட்டு மொத்த இந்தியாவையே பரபரப்பு கிளப்பி, கீச்சு பதிவிட்டு விட்டு ஆற்றிய உரையில், நம் நாட்டின் வரலாற்றில், மிகவும் முதன்மையமான ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பின், இது போன்ற செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணையை சோதிக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை, நாம் பெற்றுள்ளோம் என்றார். மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியது என புகார் தெரிவித்தன.

இதனால் தேர்தல் ஆணையம் மோடியின் பேச்சு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து விசாரணை நடத்தி இரண்டு நாட்களில் அறிக்கை பதிகை செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் மோடி பேச்சு குறித்த குழு சமர்பித்த அறிக்கையை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், மோடியின் பேச்சு தேர்தல் நன்னடத்தையை மீறிய செயல் அல்ல எனவும் எதிர்க்கட்சியினரின் புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என மோடிக்கு நற்சான்று வழங்கியுள்ளது.

இது குறித்துதாம் ஏராளமான நையாண்டி பதிவுகள்;;;;;; இணைத்தில் தீயாகி வருகின்றன. அந்த வகையில் ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ள கருத்து இது:

'இதுயெல்லாம் திட்டமிட்ட செயல்தானே! இதுக்கு எதற்கு நற்சான்று. நல்லவேளை நற்சான்று கொடுத்து இவருக்கே வோட்டு போடுங்கனு சொல்லல. அதுவரைக்கும் சந்தோசம். மிசன் சக்தி பற்றி பேசின என்னன்னே பிரச்சனைகள் வரும் எப்படி பேசணும்ன்னு எல்லாம் சொல்லிகுடுக்காம இருப்பாங்களா. எல்லாம் திட்டமிட்ட செயல். சதி திட்டமின்னும் சொல்லலாம். நற்சான்று வேற. 

டிரம்ப் கிட்டவும் ஒரு நற்சான்று வாங்கவும். ரொம்ப உபாயோகமாக இருக்குமே. முதலில் இப்போ மிசன்சக்தி தேவையா? செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தேர்தல் முடிஞ்ச அப்புறம் விட்ட என்னவாம். இதெல்லாம் சொல்லி வோட்டு வங்கதானே. கேட்டா தேசத்துரோகிகள். நாட்டுப்பற்று இல்லைனு சொல்லுவீங்க. குறுக்கு வழிமட்டும் தான் தெரியும். உங்க செயல் நாட்டுக்கு கேடு.'

என்று பாஜகவின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் தனது வருத்தத்தை பதிவிட்டிருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,107.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.