தமிழ் பண்பாடு, தமிழர்க்கு தனி அடையாளம் என்றெல்லாம்
சிந்திப்பவர்கள் தொலை நோக்கை தொலைத்து விட்டு நியாயம் அநியாயம் என்ற தலைப்பில் சிந்திக்கத்
தொடங்கி விடுகின்றனர். தற்காலிகமாக
நடக்கப் போகிற ஒரு தவறைக் களைகிறோம் பேர்வழியாக நாம் சிந்திக்கக் கூடாது. தமிழகத்தில்
ஒரு அரசியல் பிரச்சனை! அந்தப் பிரச்சனை எப்படியாவது தீர வேண்டும் என்பது
தொலை நோக்கு ஆகாது. எப்போதும் யாருடைய எந்தப் பிரச்சனையிலும் வெளியில்
இருப்பவர்களை அழைத்துக் கொண்டோமேயானால், அந்தப் பிரச்சனைக்கு மட்டுமல்ல இனி தொடரப்
போகிற எந்தப் பிரச்சனைக்கும் அவர்கள் சட்டாம் பிள்ளை ஆகி விடுவார்கள். தமிழகத்தில்
எந்தப் பிரச்சனைக்கும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் நடுவண் அரசு தலையிட வேண்டும். உடனடியாக இராணுவத்தை அனுப்பு என்றெல்லாம் கூவத்
தொடங்கி விடுகிறோம். ஏன்?
இலங்கை தமிழர் பிரச்சனையில் கூட இந்திய ராணுவத்தை அனுப்பு என்று கூவி, ஒன்னரை இலக்கம்
தமிழர்களை ஒன்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் சதியால் இழந்தது தானே விடை. இயல்பாக
எப்படி நடப்பது சரி என்று நமக்குத் தெரியும். தமிழகத்தில்
ஒரு அரசியல் பிரச்சனை. தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் கூடி இயல்பான ஒரு தீர்வை முன்
வைப்பது தானே சரி. நல்ல
தீர்ப்பு கொடுங்கள்! உடனடியாக செயல்படுங்கள் என்று ஆளுநரை ஏன் கெஞ்ச வேண்டும்? சல்லிக்கட்டு
பிரச்சனையைத் தமிழ் இளைஞர்கள் கையில் எடுத்தது போல தற்போதுள்ள அரசியல் பிரச்சனையை ஏன் தமிழக அரசியல்
கட்சிகள்- தத்தமக்கு ஏதாவது ஆதாயம் கிடைப்பதற்கு என்ற கோணத்தில்
சிந்திக்காமல், மக்கள் தேர்ந்தெடுத்த தலைவருக்கான மாற்றை மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்கும் வகையில் தீர்வு ஏன் காணக் கூடாது! சட்டமன்ற அவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. சட்டமன்றம் தாம் உயர்நீதி மன்றத்திற்கே சட்டம் இயற்றித்
தர வேண்டும். அடிப்படை சட்டத்திற்கு முரண்படாத சட்ட மன்ற சட்டங்கள்
உச்;ச நீதிமன்றத்திலும் செல்லுபடியாகும். தமிழக
சட்டமன்ற அவைத் தலைவரை, தமிழக அரசியல் கட்சிகள் அணுகி சட்டமன்றத்தைக் கூட்டச் செய்து
அதிமுக பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் ஆளும் கட்சி சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்து
விட்டால் போதுமே! அவர்தானே தமிழக முதல்வர். நமக்கிருக்கிற அதிகாரத்தை நாமே புரிந்து கொள்ளாமல்,
உரிமை வழங்க ஊரார் கூடவில்லை என்று ஏன் புலம்பிக் கொண்டிருக்க வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



