06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஊதியஉயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன்காரணமாக இன்று வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நாளை நான்காவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் விடுமுறை. ஆனால், திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் இயங்கும். மீண்டும் செவ்வாய்க் கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதாலும், புதன் கிழமை, ஊழியர்கள் போராட்டம் காரணமாகவும் வங்கிகள் இயங்கா. பணம் வழங்கும் இயந்திரங்களில், வங்கி நிருவாகத்தினர் பணம் முன்னெச்சரிக்கையாக போடுவார்களா? அப்படிப் போட்டாலும் கூடுதல் விடுமுறை நாளில் பணம் தங்குமா என்பதெல்லாம் கேள்விக் குறியே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,008.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



