Show all

டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் கைகளில் வளையல் அணிந்து போராட்டம்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 14ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

     ஐந்து பெண்கள் உட்பட 125 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அரசை ஈர்க்கும் வகையில் தினம் ஒரு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் 34-வது நாளான இன்று வளையல் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     இதுகுறித்து, அய்யாக்கண்ணு கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க நடுவண் அரசு ஏன் மறுப்பு தெரிவிக்கிறது என்று அய்யாக்கண்ணு கேள்வி எழுப்பினார்.

     எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரை நடுவண், மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற செவிசாய்க்காமல் இருக்கிறார்.

என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.