தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 987 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 987 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் மொத்தம் 660 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 83 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 743. தமிழகத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் 2-வது இடத்திலேயே உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 5,882. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்திருக்கிறது. நாம் பாதுகாப்பாக இருந்தால் உறுதியாக நம்மளவில் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். பக்கத்து வீடுதானே, பக்கத்து தெருதானே, பக்கத்துக் கடைதானே என்று பாதுகாப்பில் அலட்சியம் காட்டக்கூடாது. குறிப்பாக பாதுகாப்பாக இருப்பதற்குத்தான் முகமூடி அணிகிறோம். பக்கத்து வீட்டுக்காரர் முகமூடி அணியவில்லையே என்று நாம் முகமூடி அணிய வெட்கப்படக் கூடவே கூடாது. தெருவுக்கு வரும் வணிகர்களிடம் காய்கறி, பூ போன்ற பொருட்கள் வாங்க வெளியே வரும்போது, மூக்கில் விக்ஸ் தடவிக் கொள்ளுங்கள். கட்டாயம் முகமூடி அணியுங்கள். மஞ்சள் கலந்த நீரில் கையைக் கழுவிக் கொள்ளுங்கள். கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர், வீட்டு வைத்தியமாக பெரியவர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



