Show all

ஓரிரு நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு! டாஸ்மாக் திறப்புக்கு உயர்அறங்கூற்றுமன்றம் விதித்த தடைக்கு, உச்சஅறங்கூற்றுமன்றம் இடைக்கால தடை

ஓரிரு நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு! தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் விதித்த தடைக்கு, உச்சஅறங்கூற்றுமன்றம் இடைக்கால தடை விதித்தது.

02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் விதித்த தடைக்கு, உச்சஅறங்கூற்றுமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது போல் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு பதிகை செய்த நபர் ஒருவருக்கு ரூபாய் ஓர் இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் தமிழகத்தில் கடந்த 24,சித்திரை (மே 7) அன்று திறக்கப்பட்டன. மதுக்கடைகளில் அறங்கூற்றுமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால், அவற்றை மூடும்படி, உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அரசு தரப்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடந்தது. அரசு கொள்கை முடிவில் அறங்கூற்றுமன்றம் தலையிடுவது சரியல்ல. இதனால் சென்னை அறங்கூற்றுமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது .

வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர்கள் சென்னை அறங்கூற்றுமன்ற  உத்தரவுக்கு தடை விதித்தனர். இதனால் ஒரிரு நாட்களில் தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் என தெரிகிறது.

மதுக்கடைகளில் அறங்கூற்றுமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால், அவற்றை மூடும்படி, உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. அதன் விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது. இதை சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்  தலைமை அறங்கூற்றுவர் தலைமையிலான அமர்வும் இன்று விசாரித்தது. அந்த இன்றைய விசாரணையில் உச்சஅறங்கூற்றுமன்றத் தடை குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது உகந்தது அல்ல என்று அறங்கூற்றுவர்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இது போல் கவுதம்சிங் என்பவர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை பதிகை செய்தார். இந்த மனுவில்; கொரோனா தொற்று இருப்பதால் மதுக்கடைகளில் சமூக விலகலை யாரும் கடைப்பிடிக்கவில்லை . இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுவர்கள் இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல. இது தொடர்பாக அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும். இது பொதுநல வழக்கு அல்ல. இந்த மனுவை பதிகை செய்த நபருக்கு ரூபாய் ஓர் இலட்சம் அபராதம் விதிப்பதுடன், இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.