குஜராத்தில் உள்ள ஒரு சமூகத்தில் உள்ள திருமணமாகாத பெண்கள் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை அந்த சமூகத்தின் தலைவர்கள் பிறப்பித்துள்ளனர். பெண்கள் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருமணமாகாத பெண்கள் செல்பேசி பயன்படுத்துவதால் பாதுகாப்பின்மை சிக்கல் எழுவதாகவும், மேலும் அவர்கள் படிப்பு உட்பட மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல், அவர்கள் முன்னேற்றம் பாதிக்கப் படுகிறது என்றும் முடிவு செய்து குஜராத்தில் ஒரு சமூகத்தின் தலைவர்கள் திருமணம் ஆகாத பெண்கள் செல்பேசி பயன்படுத்த தடை விதித்துள்ளனர். திருமணமாகாத பெண்கள் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை அந்த சமூகத்தின் தலைவர்கள் பிறப்பித்துள்ளனர். இந்த சமூகத்தின் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தபோது திருமணமாகாத பெண்கள் செல்பேசி வைத்திருக்கக் கூடாது என்றும், அதேபோல் கலப்பு திருமணம் செய்தால் பெண்ணின் பெற்றோர்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் இரண்டு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது திருமணமாகாத பெண்கள் செல்பேசிகளில் காணொளி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதால் பல பிரச்சினைகள் ஏற்படுவதால் அதனை தவிர்ப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சமூகத்தின் தலைவர்கள் கூறினார்கள். ஆனால் இந்த சமூகத்தின் முடிவுக்கு பெரும்பாலான பெண்கள் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிப்பது தவறு என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,216.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



