Show all

வாழ்த்துவோம்! ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று சொன்னாலே பெயர் விளங்கும் பாரதிராஜாவுக்கு இன்று 78வது பிறந்தநாள்.

இன்று 78ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு, திரையுலக பிரபலங்களும், தமிழ்த் திரையுலக இரசிகர் பெருமக்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இந்தப் பாராதிராஜா, அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதைத்தலைவிகளை அறிமுகம் செய்தவர். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா இன்று தனது 78ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் கீச்சுவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் திரையில், 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. இப்படத்தைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், மண் வாசனை, தாவணி கனவுகள் என்று 50க்கும் மேற்பட்ட படங்களை கொடுத்துள்ளார். இதில், பல படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில விருது, பிலிம்பேர் விருது, தேசிய விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார். 

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு, நாமும் நமது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,216.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.