Show all

விரைந்து வருகிறது பாஜக நடுவண் அரசின் அடுத்த ஆப்பு! ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை. விலையில்லா அரிசியை விட்டுக்கொடுக்க தயாராவீர்

பாஜகவின் ஒற்றை நோக்கம்: அன்றும் இன்றும் என்றும் ‘ஹிந்துத்துவா, ஹிந்தி, ஹிந்துராஷ்டிரம்’ என்பதே. அந்தக் கொள்கையின் கூர் மழுங்கிப் போன நிலையில், பாஜக கொள்கை கூர்தீட்டல் முயற்சிதான் நேற்று: ஒரே நாடு ஒரே தேர்தல். இன்று: ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை.

13,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வடமாநில மக்களுக்கு, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு தந்திட வக்கில்லாமல், வடமாநில மக்களை, உடல் உழைப்புக் கூலிகளாக நாடு முழுவதும் அலைய விட்டுக் கொண்டிருக்கின்றன வடமாநிலங்கள்.

இவ்வாறு வடமாநில மக்கள், தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களில் வசிக்கும் நிலையில், அந்தக் கூலிகளின்  குடும்பத்தினர் பெரிதும் பயனடைவர்களாம். இவ்வாறு, நடுவண் பாஜக அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்

எந்த நியாயவிலைக் கடையிலும், பொருட்களை வாங்கும் வகையில், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தப் போவதாக, நடுவண் அரசு அறிவித்துள்ளது.

உணவு விநியோக திட்டம் தொடர்பாகவும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காகவும், நடுவண் உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சி தலைவருமான, ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அனைத்து மாநில உணவுத் துறை செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், ராம்விலாஸ் பஸ்வான் பேசியதாவது: மக்கள், நாட்டில் உள்ள எந்த நியாய விலைக் கடையிலும், பொருட்களை வாங்கும் வகையில், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டம், விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை தமிழக மக்கள் குடும்ப அடையாள அட்;டை மூலம் பெற்று வரும் அனைத்து சலுகைகளுக்கும் உரிய ஆப்பு தயாரித்து விட்டது நடுவண் பாஜக அரசு. உங்கள் விலையில்லா அரிசியை விட்டுக் கொடுக்க தமிழக மக்கள் தயாராகுங்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,197.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.