மேற்கு வங்கத்தில், இப்போதைய ஆளுநர், கேசரிநாத் திரிபாதியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அந்த இடத்திற்கு, கிரண் பேடி நியமிக்கப்படலாம் என, சொல்லப்படுகிறது. மம்தா பானர்ஜிக்கு, சரியான போட்டி கிரண் பேடி என்கின்றனர், பாஜக தலைவர்கள். 22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆளுநராக நியமிக்கப் பட்டதிலிருந்தே பாண்டிச் சேரியின் தலைவலியாக இருந்து வருகிறார் கிரண்பேடி. அண்மையில் ஒற்றைக் கீச்சுபதிவில் தமிழக மக்களை அசிங்கப் படுத்த முயன்று, விவகாரம் பெரிதாகவே அந்தக் கீச்சுப் பதிவை நீக்கிவிட்டு வருத்தம் தெரிவித்தார் கிரண் பேடி. திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சியில், கிரண் பேடியை, வேறு மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்க ஆலோசனை நடக்கிறதாம். மம்தா பானர்ஜி, முதல்வராக இருக்கும் மேற்கு வங்கத்தில், இப்போதைய ஆளுநர், கேசரிநாத் திரிபாதியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அந்த இடத்திற்கு, கிரண் பேடி நியமிக்கப்படலாம் என, சொல்லப்படுகிறது. மம்தா பானர்ஜிக்கு, சரியான போட்டி கிரண் பேடி என்கின்றனர், பாஜக தலைவர்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,206.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



