நாளை முதல் தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகளை ஓட்ட இயலாது என தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது வேலை நிறுத்தம் அல்ல என்றும் தெரிவித்துள்ளது. 22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம், தண்ணீர் எடுப்பதற்கே இடமில்லை. இருக்கின்ற இடங்களிலும் தண்ணீர் எடுக்க அதிகாரிகள் மிக கெடுபிடி காட்டுகின்றனர். எனவே தொழிலை செய்ய இயலாததால் தற்காலிகமாக தண்ணீர் லாரிகளை இயக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தண்ணீர் இருக்கும் இடத்தை அரசே எங்களுக்கு காட்டினால் நாங்கள் தண்ணீர் எடுத்து லாரிகளை நிறுத்தாமல் இயக்குவதாக கூறியுள்ளார். தலைநகர் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து வரும் நிலையில், தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், தனியார் தண்ணீர் லாரிகளை நம்பியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளிட்டவை கடும் பாதிப்புகளை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,206.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



