Show all

தமிழ்மக்கள் தன்மீது பாராட்டும் அன்பில் நெகிழ்ந்து, கதறி அழுதார் மதுமிதா! பாதுகாக்கப் பட்டார் மதுமிதா, என்று கமல் அறிவித்த நிலையில்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறப் போகிறவரை நாளை அறிவிப்பார் கமல். இன்று வெளியேற்றப் பட்டியலில் இருந்து வாக்குகளால் பாதுகாக்கப்பட்ட ஒரு நபரை அறிவித்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் கமல்.

21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கமல் ஒருங்கிணைக்கும் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். 

ஒவ்வொரு கிழமையும் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களால் முன்மொழியப் பட்டு அவர்களைக் காப்பாற்ற பார்வையாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் மிக அதிகமான வாக்கு பெறுகிறவர்களை சனிக் கிழமையே பாதுகாக்கப் பட்டார் என்று கமல் அறிவித்து விடுவார். 

இன்றைய நிகழ்ச்சியில் யார் பாதுகாக்கப் பட்டார் என்பதை கமல் வெளியிடுவதற்கு முன்னால், யாரை நீங்கள் வெளியேற்ற விரும்புகின்றீர்கள் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார். அதிக போட்டியாளர்கள் வெறுக்கும் நபராக மதுமிதா தேர்வானார். 

உங்கள் விருப்பம் இவ்வாறு இருக்கிறது ஆனால் மக்கள் காப்பாற்றியிருப்பது யாரைத் தெரியுமா என்று கேட்டு சற்று நேரம் நிதானித்து மதுமிதா என்று அறிவித்தார். பிக்பாஸ் வீட்;டில் பெரும்பாலானவர்களின் வெறுப்பை சம்பாதித்த மதுமிதா, தமிழ்மக்கள் தன் மீது கொண்டிருக்கிற அன்பால் நெகிழ்ந்து கதறி அழுதார். 

இந்தக் கிழமை வெளியேற இருப்பவர் யார் என்பதை நாளைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அறிவிப்பார். நாளை வெளியேறப் போவது, தமிழ் மக்களிடம் மிகக் குறைந்த வாக்குகள் பெற்றிருக்கிற சாக்சியாகவோ, பாத்திமா பாபுவாகவோ இருக்கலாம் என்று யுகங்கள் தெரிவிக்கின்றன. நாளை வரை பொறுத்திருப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,205.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.