Show all

யோகி பாபு, மேக்னா நாயுடு பங்கேற்கும் ஒரு பாடல் காட்சி! தாய்லாந்தில் படமாக்கப்படுகிறது; படம் தர்மபிரபு

யோகிபாபு கதைத்தலைவனாக நடித்து வெளிவர இருக்கும் தர்மபிரபு படத்திற்கான பாடல் காட்சியொன்று தாய்லாந்தில் படமாக்கப்படுகிறதாம்.

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கதைத்தலைவனாக
எமன் வேடத்தில் யோகி பாபு நடிக்கும் படம், தர்மபிரபு. படம் குறித்து இயக்குனர் முத்துக்குமரன் கூறியதாவது: எமன் ராதாரவி, ரேகா இணையரின் மகன் யோகி பாபு, அடுத்து எமன் பதவிக்கு வர ஆசைப்படுகிறார். ஆனால், சித்ரகுப்தன் ரமேஷ் திலக் அவருக்கு எதிராக சதி செய்கிறார்.
அவற்றை யோகி பாபு எவ்வாறு முறியடிக்கிறார்? இறுதியில் எமன் பதவியை அடைந்தாரா என்பது கதை. சிவபெருமான் வேடத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் நடிக்கிறார். எமன் மற்றும் எமலோக பின்னணி கொண்ட படம் என்பதால், ஏவிஎம் படப்;பிடிப்பகத்தில் பிரமாண்டமான முறையில் எமலோகம் காட்சி அமைப்பு போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மேலும் இந்தப் படத்திற்காக, யோகி பாபு, மேக்னா நாயுடு பங்கேற்கும் ஒரு பாடல் காட்சி தாய்லாந்தில் படமாக்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,138.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.