Show all

ஒரேநாடு ஒரேஆதிக்க இனம் என்னும் வலையை பின்னிடும் பாஜக! வலைக்கண்ணிகளில் அடுத்த ஒன்று: ஒரேநாடு ஒரேகுடும்ப அட்டை

இந்தியாவில் எந்த மன்னர்கள் ஆண்ட போதும், ஆரியர்- சூத்திரன் என்ற ஆண்டான்- அடிமை மனுநீதிக் கோட்பாட்டை முன்னெடுத்து வந்தனர் பார்ப்பனர்கள். வெள்ளையர்கள் ஆட்சியில் அவை கொஞ்சம் கொஞ்சமாக நீர்க்கத் தொடங்கின. ஆங்கிலம் கற்றவன் அந்தக் கோட்பாடுகளில் இருந்து மீண்டு வர முடிந்தது. இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நிலையில், மீண்டும் மனுநீதி புத்துயிர் பெற, பாஜக முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறது.

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் எந்த மன்னர்கள் ஆண்ட போதும், ஆரியர்- சூத்திரன் என்ற ஆண்டான்- அடிமை மனுநீதிக் கோட்பாட்டை முன்னெடுத்து வந்தனர் பார்ப்பனர்கள். வெள்ளையர்கள் ஆட்சியில் அவை கொஞ்சம் கொஞ்சமாக நீர்க்கத் தொடங்கின. ஆங்கிலம் கற்றவன் அந்தக் கோட்பாடுகளில் இருந்து மீண்டுவர முடிந்தது. 

இந்தியா விடுதலை பெற்ற பிறகு காங்கிரஸ் ஹிந்தியைத் திணித்து வடமாநிலங்களை மனுநிதிக் கோட்பாடுகளில் ஓரளவிற்கு பிணைத்தது. தற்போது பாஜக ஆட்சியில் ஒட்டு மொத்த இந்தியாவையும், ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு, ஒரேநாடு ஒரேஆதிக்க இனம் என்னும் வலையில் சிக்க வைக்க ஒரேநாடு ஒரே(ஹந்தி)மொழி, ஒரேநாடு ஒரே(விநாயகர் ஊர்வலம்)கலாச்சாரம், ஒரேநாடு ஒரே கல்வி, ஒரேநாடு ஒரேவரி, ஒரேநாடு ஒரேதேர்தல் என்று ஒவ்வொரு கண்ணியாக வலையைப் பின்னி வருகிறது. அடுத்து ஒரேநாடு ஒரேகுடும்ப அட்டை என்னும் கண்ணியைப் பின்னத் தொடங்கியிருக்கிறது.   

இந்த ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை தமிழக அரசு துணிச்சலாக எதிர்க்க வேண்டும் ‘ஆமாம் சாமி’ போட்டு தலையாட்டி விடக்கூடாது என தமிழக அரசுக்கு கி.வீரமணி வலிறுத்தியுள்ளார்.

அண்மையில் டெல்லியில் நடுவண் உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த மாநில உணவுத்துறைச் செயலாளர்கள் கூட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைத்து, இந்தியா முழுவதிலும் ஒரே குடும்ப அட்டை முறைக் கொண்டுவரப்படும் என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது. 

இதற்கு எதிர் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்திற்கு திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற திட்டமிட்ட வரிசையில், ஒரே குடும்ப அட்டை என்பதை நடுவண் அரசு அறிவித்திருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்தை ஒழித்து, மாநில உரிமைகளை பறித்து, ஒற்றை ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடாகும்.

மேலும், தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் தன்னுடைய நிலைப்பாடு என்னவென்பதை தெளிவுபடுத்தி, இந்த திட்டத்தை துணிச்சலாக ஏற்க மறுக்கவேண்டும். ‘ஆமாம் சாமி’ போட்டு தலையாட்டி விடக்கூடாது.

தமிழகத்தின் உணவு உரிமை என்பதைவிட நம்முடைய மாநிலத்தின் உரிமை பிரச்சினை என்பதால் தெளிவுடனும், துணிவுடனும் நடந்துகொள்ள வேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,199.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.