Show all

இரண்டு புதியவர்கள்; வாங்க பார்க்கலாம்! தலைமைச் செயலாளர் சண்முகம். காவல்துறை பொதுமை இயக்குநர் திரிபாதி.

ஒரே சமயத்தில், தமிழகத்தின் இரண்டு உயர் பொறுப்புகளுக்கு இரண்டு புதியவர்கள் வருகிறார்கள். தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு சண்முகம். புதிய காவல்துறை பொதுமை இயக்குநர் பொறுப்புக்கு திரிபாதி.


15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்றுடன், தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழ்நாடு காவல் துறையின் பொதுமை இயக்குநர் இராசேந்திரன் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதையடுத்து, நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலத்தைச் சேர்ந்த சண்முகம் வேளாண் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். 
திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துறையில் ஒரே பதவியில் பொறுப்பு வகித்தவர் சண்முகம் என்று சொல்லப் படுகிறது. 

இதேபோல, சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக இருக்கும், திரிபாதி, சட்டம்-ஒழுங்கு காவல்துறை பொதுமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் இதுவரை 9 மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். சென்னை காவல்துறை ஆணையராகவும் பதவி வகித்துள்ளார். வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது, இவர் சென்னை காவல்துறை ஆணையராக இருந்த போதுதான். வாங்க பார்க்கலாம்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,199.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.