Show all

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவும் மோதினர். இப்போட்டியில் 19-21, 22-20 மற்றும் 20-22  என்ற செட்களில்  பிவி சிந்து தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 

25 நிமிடங்கள் நீடித்த முதல் செட்டை 19-21 என இழந்தார். இரண்டாவது செட்டை போராடி 22-20 என 38 நிமிடங்களில் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இருப்பினும் 20-22 என மூன்றாவது செட்டை போராடி இழந்தார் பிவி சிந்து. 3-வது செட்டில் 46 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.