11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் மோடி ஆட்சி குறித்து குற்றஞ்சாட்டி பேசியதற்காக மாற்றுத்திறனாளி ஒருவரை உத்தரப் பிரதேச பாஜக தலைவர் முகமது மியா தடியால் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் முகமது மியா அவரது அலுவலத்துக்கு வெளியே சாலையில் நின்று கொண்டிருந்தபோது, மாற்றுத்திறனாளி ஒருவர் அகிலேஷ் யாதவுக்கே நாங்கள் ஓட்டளிக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த முகமத் மியா அவரை தடியால் வாயில் அடித்து மிரட்டி இருக்கிறார். இது குறித்த காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து முகமது மியா கூறும்போது, அந்த நபர் மோடியையும், யோகி ஆதித்ய நாத்தையும் விமர்சித்தார் என்றும், அவர் மது அருந்தி இருந்தார் என்றும், தான் அவரை அந்த இடத்திலிருந்து அகற்றவே அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,013.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



