Show all

மேசைகளாக மாறின! கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்கள், தேநீர் கடைகளில்

12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பால் தமிழக கழிமுக மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. குடிசை மற்றும் ஓட்டு வீடுகளின் மேற்பகுதி காற்றில் பறந்தன. வயல்வெளிகள் பலத்த சேதம் கண்டன. ஏராளமான மரங்கள் சாய்ந்தன. 

மின்கம்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. கழிமுக பகுதி மக்கள் தங்கள் 20 ஆண்டுகால உழைப்பை இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசும், தன்னார்வ குழுக்களும் செய்து வருகின்றன. சேதமடைந்த மின்கம்பங்கள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. 

சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்ற, இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. அவற்றின் உதவியால் மரங்கள் அகற்றப்பட்டு, சாலைகள், வயல்வெளிகள் சீரமைக்கப்பட்டன.

இந்நிலையில் வெட்டி எடுக்கப்பட்ட தென்னை மரங்கள் தேநீர்கடை, உணவகங்களில் நாற்காலிகளாகவும் மேசைகளாகவும் மாறியுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் தீயாகி வருகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,014.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.