பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் பதவி காலம் நாளை மறுநாளுடன்
(சனிக்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து பா.ஜனதா தலைவர் பதவிக்கு வருகிற 25ந் தேதி
தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி பா.ஜனதா தலைமை அலுவலகம் வெளியிட்டு உள்ள
தேர்தல் அறிவிக்கையில் ‘பா.ஜனதாவின் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் இருந்து
வருகிற 24-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பங்களைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம். இதன்
மீதான பரிசீலனை மற்றும் விண்ணப்பங்கள் ஏற்பு அல்லது திரும்பப் பெறுதல் பகல் 1 மணி முதல்
1.30 மணி இடையே நடைபெறும். தேவைப்படும் பட்சத்தில் 25-ந்தேதி காலை 10 முதல் 2 மணி வரை
தேர்தல் நடைபெறும்’ என்று
கூறப்பட்டு உள்ளது. பிரதமர் மோடிக்கு, அமித்ஷா மிகவும் நெருக்கமானவர்
என்பதால் ஒருமனதாக அவரே மீண்டும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா தலைவராக பதவி வகித்த ராஜ்நாத் சிங் மத்திய
மந்திரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி அமித்ஷா
தலைவராக பதவியேற்றுக் கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



