Show all

கொரில்லா பட வெளியீடு தள்ளிப் போகிறது! பீட்டாவின் சேட்டை காரணமா?

உலக அளவில் பீட்டா அமைப்பு ஏதோ ஒரு அரைகுறை கலாச்சாரத்தை முன்னெடுத்து அப்படி இப்படி என்று போய்க் கொண்டிருந்தாலும், தமிழக அளவில் பீட்டா ரொம்ப சேட்டை செய்து கொண்டிருக்கிறது. அதனுடைய சேட்டை கொரில்லா படத்திற்கு எதிராக தொடங்கப் பட்டிருக்கிறது. நாளை வெளியாவதாக இருந்த கொரில்லா படத்தின் வெளியீடு தள்ளிப் போவதால் பீட்டாவின் சேட்டை காரணம் என்ற பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, யோகிபாபு, அர்ஜுன் ரெட்டி படம் புகழ் சாலினி பாண்டே, ராதாரவி, ராஜேந்திரன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள நகைச்சுவை கலந்த திகில் படத்தில் காங் என்கிற குரங்கு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. 

கொரில்லா படத்திற்கு எதிராக தனது சேட்டையைத் தொடங்கியுள்ள பீட்டா, கொரில்லா படத்தை ஏன் பார்க்கக் கூடாது என்று கூறி சில காரணங்களை வெளியிட்டுள்ளது. குரங்குகளை அதன் தாயிடம் இருந்து பிரிக்கிறார்கள். சின்னத்திரை மற்றும் பெரியதிரையில் பயன்படுத்தப்படும் குரங்குகள் பிறந்த உடனேயே தாயிடம் இருந்து பிரிக்கப்படுகின்றன. அந்த குரங்குகளை மோசமாக நடத்துகிறார்கள். பயிற்சியாளர்கள் அவ்வப்போது குரங்குகளை குத்துவது, எத்துவது, அடிப்பது, மின்சார அதிர்ச்சி கொடுப்பது என்று கொடுமைப்படுத்துகிறார்கள். படக் காட்சிகள் குறைவாக இருக்கலாம் ஆனால் விலங்குள் அதன் ஆயுள் முழுவதும் சிரமப்படுத்தப்படுகின்றன. குரங்குகள் வளர்ந்த பிறகு அவற்றை கட்டுப்படுத்துவது கடினமாகும்போது அவற்றை கூண்டுகளில் அடைத்து தனிமைப்படுத்துகிறார்கள். உயிருடன் இருக்கும் விலங்குகளை பயன்படுத்துவது தேவையில்லாதது. வெற்றிப் படங்களான பிளானட் ஆப் தி ஏப்ஸ் மற்றும் தி ஜங்கிள் புக்கில் நிஜ விலங்குகளை அல்ல மாறாக சிஜிஐ தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்தினார்கள். குரங்குகளை தவறாக சித்தரிப்பது அவற்றின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பீட்டாவின் அறிக்கையை பார்த்தவர்களுக்கு, பீட்டா எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு படத்தில் என்ன உள்ளது என்பதை பார்க்கும் ஆவல் மிகுந்துள்ளது. ஆக மொத்தம் பீட்டாவின் சேட்டை கொரில்லா படத்தின் வெற்றிக்கு உரமே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,189.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.