Show all

ஜம்மு காஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது! அதிமுக உட்பட ஆதரவு 125; காங்கிரஸ் உட்பட எதிர்ப்பு 61

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது என்று மாநிலங்களவையில் பேசிய நடுவண் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது என்று மாநிலங்களவையில் பேசிய நடுவண் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். நடுவண் அரசின் இந்த நடவடிக்கைக்கு, மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஆனால் நம்ம அதிமுக ஆதரவுடன்தான் பதிகை செய்யப் பட்ட ஜம்மு காஷ்மீர் மாநில பிரிப்பு சட்டமுன்வரைவு வெற்றி பெற்றது.

பக்கத்து இலைக்குப் பாயாசம் (மாநிலத்திற்கான சிறப்புத் தகுதி) கிடைக்காத போது, தட்டிக் கேட்க வேண்டியது விருந்தின் மரபு. அதுவும் பாயாசத்தின் அருமை பெருமை, விருந்தில் பாயசத்தின் மரபு, பாயசத்திற்காக போராட வேண்டியது, பாயசத்திற்காகவே உருவான திராவிட இயக்கங்களின் கடமையாகும். ஆனால் நம்ம அதிமுக ஆதரவுடன்தான் பதிகை செய்யப் பட்ட ஜம்மு காஷ்மீர் மாநில பிரிப்பு சட்டமுன்வரைவு வெற்றி பெற்றது.

அதனையடுத்து, காஷ்மீர் பிரிப்பு சட்டமுன்வரைவு மீதான தீவிர விவாதம் நடைபெற்றது. சட்டமுன்வரைவு மீதான தீவிர விவாதத்துக்கு பிறகு, முதலாவதாக காஷ்மீரில் முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டமுன்வரைவு பதிகை செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநில பிரிப்பு சட்டமுன்வரைவு பதிகை செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

சட்டமுன்வரைவுக்கு ஆதரவாக 125 பேரும், எதிராக 61 பேரும் வாக்களித்துள்ளனர். சட்டமுன்வரைவுக்கு ஆதரவாக, பகுஜன் சமாஜ், அதிமுக, ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் நம்ம அதிமுக ஜம்மு காஷ்மீர் மாநில பிரிப்பு சட்டமுன்வரைவு வெற்றி பெற வாக்களித்தது வரலாற்றின் மிகப் பெரிய வேடிக்கையாகும். 


சட்டமுன்வரைவுக்கு காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் பிரிப்பு சட்டமுன்வரைவு நிறைவேறிய நிலையில், நாளை மக்களவையில் இந்த சட்டமுன்வரைவு  பதிகை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,235.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.