Show all

பாஜக ஆதிக்கவாதம் குறித்து ஸ்டாலின்! தமிழகத்தின் பண்பாட்டிற்கும், இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி

பாஜக கட்சியின் இந்திய அளவிலான அமைப்புக்கான தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் திமுக போன்ற பிரிவினைவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என தமிழக பாஜக கட்சியின் கிளைப் பொறுப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

09,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அன்றைக்கு நடுவண் ஆட்சியில் இருந்த காங்கிரசின் ஆதிக்கவாதத்திற்கு எதிராக பேரறிஞர்அண்ணாவால் விளக்கமளிக்கப்பட்ட கோட்பாடுகளை மீண்டும் அதே வகையில் விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு எழுந்திருக்கிறது இன்றைக்கு நடுவண் ஆட்சியில் இருக்கிற பாஜகவிற்கு. அன்றைக்கு காங்கிரசின் பார்ப்பனிய ஆதிக்கவாதத்திற்கு எதிரான அறைகூவலை பிரிவினைவாத சக்திகள் என்று தலைப்பில் ஒடுக்க நினைத்தது. இன்றைக்கு இந்தியாவில் காங்கிரஸ் இல்லை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்றைக்கு அதே பார்ப்பனிய ஆதிக்கவாதம். ஆனால் கட்சி மாறி இருக்கிறது இப்போது பாஜக. ஆனால் அன்றைக்கு இருந்த வேகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட நடுவண் பாஜக அரசின் ஆதிக்கவாதத்திற்கு எதிராக முழக்கமிட்டிருக்கவில்லை இன்றைய திமுக. 

ஆனால்: ‘தமிழகத்தில் திமுக போன்ற பிரிவினைவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என பாஜக இந்திய அளவிலான தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்திருக்கிறார். இதற்கு பதிலடியாக தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜகதான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார்.

பாஜக கட்சியின் தமிழக கிளைக்குத் தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக, அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தை எல்.முருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜகவில் தற்போது எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த எழுச்சி சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பேசிய பாஜக கட்சியின் இந்திய அளவிலான அமைப்புக்கான தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் திமுக போன்ற பிரிவினைவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என கேட்டுக் கொண்டார். இந்த செயற்குழு கூட்டத்தில் திமுகவைக் கண்டித்தும், நடுவண் பாஜக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில் பேசிய எல்.முருகன், சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். தமிழக மாணவர்கள் மீது காங்கிரசார் போல மீண்டும் ஹிந்தியைத் திணித்திட மறைமுக நடவடிக்கையாக புதிய கல்விக் கொள்கையை பாஜக கொண்டு வந்தால், அதனை தடுத்து திமுக தமிழக மக்களுக்கு எழுச்சியை உருவாக்குவதாகவும், ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது எனவும் தெரிவித்தார்

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக செயற்குழுக் கூட்டத்தில் திமுகவை தேவையின்றி ஜே.பி.நட்டா சீண்டியிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். செயற்குழுக் கூட்டத்தில் திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசியிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகளை நடுவண் ஆட்சியில் பொறுப்பு கிடைக்கப்பட்டவர்கள் பறிக்கும்போது, மக்களின் மனதில் ஆட்சிசெய்யும் மக்கள் இயக்கமான திமுக, குரல் கொடுக்கவே செய்யும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பண்பாட்டிற்கும், இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும், மக்களாட்சி மாண்புகளுக்கும், நாட்டின் அரசியல் சட்டத்துக்கும் ஒரே எதிரியாக பாஜக திகழ்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.