அயோத்தியில் நீண்டகாலமாக நிலவிவரும் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்சனையில் ஒருமித்த சுமூகமான தீர்வை காண்பதற்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பொதுவானவர்கள் குழு ஒன்றை உச்ச அறங்கூற்றுமன்றம் நியமித்தது. அந்தக் குழு தங்கள் சமரச முயற்சி கைகூடவில்லை எனத் தெரிவித்துள்ளது. 17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அயோத்தியில் நீண்டகாலமாக நிலவிவரும் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்சனையில் ஒருமித்த சுமூகமான தீர்வை காண்பதற்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பொதுவானவர்கள் குழு ஒன்றை உச்ச அறங்கூற்றுமன்றம் நியமித்தது. இக்குழுவுக்கு தலைவராக ஓய்வுபெற்ற அறங்கூற்றுவர் இப்ராஹிம் கலிபுல்லா நியமிக்கப்பட்டார். மேலும் இக்குழுவில் சிறிசிறிரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் சிறிராம் பஞ்சு ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று பொதுவானவர்கள் குழுவின் சார்பில் நிலவர அறிக்கை பதிகை செய்யப்பட்டது. பொதுவானவர்கள் குழுவின் அந்த அறிக்கையில், அயோத்தி நில விவகாரத்தின் சமரச முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, வழக்கை வரும் செவ்வாய்க் கிழமை முதல் அன்றாடம் விசாரித்து விரைவில் முடித்து வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,232.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.