விழா என்றால் விழாமல் இருப்பது என்று பொருள். தமிழ்ச்சமுதாயம் விழாமல் இருப்பதற்கு தமிழர்கள் கொண்டாடிய விழாக்களில் பொங்கலை அடுத்து, ஆடிப் பெருக்கும் முதன்மையான விழாவாகும். இன்று தமிழகம் முழுவதும் ஆடிப் பெருக்கு விழா காவிரிக் கரையோரம் சிறப்பாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது. 18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பொன்படு நெடுவரையில் தோன்றி பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். குடகு நாட்டு மலை, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழகத்தில் பொன்படு நெடுவரை என்று பெயரிடப்பட்டிருந்தது. அது தமிழர் நிலமாகவும் இருந்தது. குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4,186 அடி உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். காவிரி பிறந்த இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரையுள்ள கழிமுகப் பகுதி தமிழ் மக்களால் பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாகக் மழைக் காலத்தில் பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி நீர்ப் பெருக்கு விழா கொண்டாடப் பட்டு வருகிறது. இன்றும் மகிழ்வோடு கொண்டாடப் படவிருக்கிறது ஆடிப்பெருக்கு விழா! ஆனால் பெருக்கு இல்லாமல். மலைக் குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கல்லும் மண்ணும் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழமையான அணை என்பது கல்லணையின் சிறப்பு. இது உலகிலேயே பயன்பாட்டிலுள்ள முதலாவது பழைய அணை. மேட்டூர் அணையில் 10000 கனஅடி நீர் வரத்துக்கு- விநாடிக்கு 1000 கனஅடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது செல்லக்கூடிய குறைந்த அளவு தண்ணீரிலும் ஏராளமான பொதுமக்கள் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாட அதிகாலை முதலே தமிழகம் முழுவதும் காவிரியாற்றுக்கு அணிஅணியாய் பயணிக்கின்றனர் தமிழக மக்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,233.
கட்டுக்கடங்காத காட்டாறாகப் பாய்ந்துகொண்டிருந்த காவிரியை அடக்கிக் கழனிகளில் பாய்ச்ச கரிகால் சோழன் தமிழ்த் தொடர் ஆண்டு 3090ல் கல்லணையைக் கட்டினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.