Show all

குஜராத்தில் தலித் பெண் மீது தாக்குதல்! நாற்காலியில் உட்கார என்ன துணிச்சல் என்பதாக

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தின் வல்தேரா கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் ஆதார் அட்டைகள் வழங்கும் பணியில் இருப்பவர் 45 அகவை தலித் பெண்மணி பல்லவிபென் ஜாதவ்.

இந்நிலையில் உள்ளூர்வாசி ஜெயராஜ் வேகத் என்ற நபர் பல்லவிபென் ஜாதவ் நாற்காலியில் உட்கார்ந்ததைப் பார்த்து ஆத்திரமடைந்து 'தலித்தாக இருந்து கொண்டு நாற்காலியிலா உட்காருகிறாய் என்ன தைரியம்?' என்று அவரை எட்டி உதைத்துள்ளார், இதில் பல்லவிபென் ஜாதவ் கீழே விழுந்ததாக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

பல்லவிபென் ஜாதவ்வின் கணவர் கண்பத் ஜாதவ் புகார் அளித்துள்ளார்.  இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில் சாதிவெறி பிடித்த ஜெயராஜ் வேகத் மேலும் 20-25 பேரை அழைத்துக் கொண்டு பல்லவிபென் ஜாதவ் வீட்டுக்குச் சென்று ஆயுதங்களினால் அவரையும் கணவரையும் குடும்ப உறுப்பினர்களையும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து காவலர்கள் பிற்படுத்தப் பட்ட மலைச்சாதியினர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு கொலை முயற்சி, கொள்ளை ஆகிய பிரிவுகளிலும் வழக்குப் போட்டுள்ளனர் மேலும் பல்லவிபென்னை தாக்கியவர்கள் அவரது தாலியையும் பறித்துச் சென்றதாகவும் அவரது உறவினர் ஒருவரை நெருப்பு வைத்துக் கொல்லவும் திட்டமிட்டதாகவும் காவல் துறை தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,812. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.