25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வு கொடுமை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மூன்று மாணவிகள் பலியாகி உள்ளனர். நீட் தேர்வால் மருத்துவராக முடியாமல் மூன்று மாணவிகள் இதுவரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சென்ற ஆண்டு அனிதா, இந்த ஆண்டு பிரதீபா, சுபஸ்ரீ என மூன்று உயிர்களை தமிழகம் பறிகொடுத்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்தவரும், நடுவண் பாதுகாப்பு துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் சென்னையில் பேட்டியளித்தார். அதில் நீட் குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது நீட்டால் தான் மாணவர்கள் இறந்தார்களா என்பது தாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், அவர்கள் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை விசாரிக்க வேண்டும் என்று கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயல் என்று தமிழக மக்கள் கொந்தளிக்கின்;றனர். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 13 பேர் மரணம் அடைந்தனர். இதற்கு இன்னும் மோடி இரங்கல் தெரிவிக்கவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன், துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது பற்றி மோடியிடம் கேட்டு அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன், என்கிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,812.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



