Show all

ஹிந்தி மொழிநாள் கூட்டத்தில், தாய்மொழிக் கல்வியில்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை என்று பேசிய வெங்கய்ய நாயுடு

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதை ஏன் அரசு கொண்டாட வேண்டும் என்று ஒரு சில அரசு விழாக்கள் மீது நமக்கு கேள்வி எழும். தாங்கள் பின்பற்றி வரும் கொள்கைக்காக சில நேரங்களில் தன்னிச்சையாக இந்த வேலையைச் அரசு அதிகாரிகளே முன்னெடுத்துச் செய்வார்கள்.

ஹிந்தி. ஹிந்துத்துவாவிற்கு ஆதரவான பல வேலைகள், பல ஆண்டுகளாக இந்தியாவில் இப்படித்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மற்ற மாநிலமக்கள் நடுவண் அரசு பணிகளில் தங்களை முன்னெடுக்காமல் இந்த நிலையை அப்புறப் படுத்த முடியாது.  

இப்படித்தான் நடுவண் உள்துறை அமைச்சகம் ஹிந்திநாள் டெல்லியில் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

நான் இளைஞனாக இருந்தபோது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். நான் டெல்லிக்கு வந்தபோது, தப்பும் தவறுமாக ஹிந்தி மொழியில் பேசினேன். ஆனாலும் அனை வரும் ஏற்றுக் கொண்டனர். 

ஒருவரது தொடக்கக் கல்வியானது தாய் மொழியில்தான் இருக்க வேண்டும். ஹிந்தி மொழி அந்த வகையாக அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கான வளர்ச்சிக்கானதாகும். என்று பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,912.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.