Show all

விமானத்தில் பிறந்த இளவரசன்! விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்த இண்டிகோ

நடுவானில் குவா குவா. விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்தது இண்டிகோ விமான நிறுவனம்.

22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இண்டிகோ விமானத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு பயண நேரத்தில் விமானத்திலேயே ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய இண்டிகோ சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.

இண்டிகோவின் 6இ 122 விமானம் நேற்று டெல்லியில் இருந்து பெங்களூரு சென்றுள்ளது. பயணிகளுக்கு நடுவே கர்ப்பிணி ஒருவரும் விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். 

பேறுக்கு இன்னும் நாள் உள்ளதே என துணிச்சலாக பயணம் மேற்கொண்ட பெண் பயணிக்கு விமானம் பறந்து கொண்டிருந்த பொழுது இடுப்பு வலி வந்துள்ளது. 

விமானம் பறந்து கொண்டிருக்கும் பொழுதே பேறு வலி வந்ததால், விமானப்பணிப் பெண்கள் கர்ப்பிணிக்கு உதவி செய்துள்ளனர். 

சிறிது நேரத்திற்கு  பின் அப்பெண்ணுக்கு  அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த சிறப்பு நிகழ்வு குறித்து இண்டிகோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
அந்த அறிக்கையில் தங்கள் விமானத்தில் குழந்தை பிறந்ததால் இனி வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தைக்கு இலவச பயணத்தை அறிவித்துள்ளது இண்டிகோ நிறுவனம். மேலும் பேறுக்கு உதவிய பணிப்பெண்களையும் வாழ்த்தியுள்ளது. இண்டிகோ நிறுவனம்.

நம்ம நரேந்திரமோடிக்கு ஆட்சி கிடைத்து உலகம் சுற்ற கிடைத்த வாய்ப்பு போல, இந்த இளவரசனுக்கு வானில் பிறந்த காரணத்தால் கிடைத்துள்ளது இந்த அரிய வாய்ப்பு. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.