05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாங்கள் ஆட்சிக்காக அலையவில்லை என்றும் அதற்காக கூட்டணி வைக்கவில்லை என்றும் மெகபூபா முப்தி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக பாஜக பொறுப்பாளர் ராம்மாதவ் இன்று மதியம் நிருபர்கள் மத்தியில் அறிவித்தார். ஆட்சிக்கான ஆதரவை திரும்பப் பெற்றதற்கான கடிதத்தை மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து ஆட்சி கவிழும் சூழல் உருவாக்கியதால் அவராகவே பதவியை துச்சமாக தூக்கி வீசி விட்டார் மெஹபூபா முப்தி இந்தக் கூட்டணி உடைய கீழ்கண்ட காரணங்கள் கூறப்படுகிறது. காஷ்மீரில் தீவிரவாதிகள் மீது ரம்ஜான் வரை பதிலடி தாக்குதல் நடத்த வேண்டாம் என்று மெஹபூபா கேட்டுக் கொண்டார். அதுபோல் அமைதி ஏற்படவே மெஹபூபா முயற்சித்தார். கத்துவாவில் சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போதிலிருந்து இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு ஆதரவாக மாநில பாஜக தலைவர்கள் பேசினர். இதையடுத்து கைது செய்யப்பட்டவருக்கு நியாயம் கோரி நடத்தப்பட்ட பேரணியில் இரு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வாழும் உரிமை, பேச்சு சுதந்திரம் உள்பட குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் அபாய கட்டத்தில் இருந்தன. ரம்ஜான் விழாவிற்கு அடுத்த நாள் மூத்த இதழியலாளர் சுஜாட் புகாரி உள்பட பாதுகாப்பு வீரர்கள் இருவர் ஸ்ரீநகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நாளில் பாதுகாப்பு வீரர் ஒருவர் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது கடத்தி கொல்லப்பட்டார். இரு கட்சிகளும் ஆட்சி வந்தவுடனேயே பிரிவினைவாதிகளுடனான பேச்சுகள், ஆயுத படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெறும் திட்டம் வாக்குறுதிகளில் இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கிற பாஜகவால் தமிழக மக்களுக்கு கொடுக்கப் படுகிற நெருக்கடி இதை விட அதிகமாயிற்றே! மெகபூபா தமிழக முதல்வராக இருந்திருந்தால் எப்போதோ ஆட்சியைக் கலைத்திருப்பார் போல! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,823.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



