Show all

அறங்கூற்றுவர் கிருபாகரன்: சமஉக்கள் தகுதி நீக்கத் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை? எடுக்காதது ஏன்!

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் மற்றும் அறங்கூற்றுவர் சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கு மூன்றாவது அறங்கூற்றுவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நாளை விசாரணையைத் தொடங்க உள்ளாராம்.

இந்நிலையில், வழக்கு விசாரணை ஒன்றில், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், 'முதலமைச்சர், அமைச்சர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. தலைமை அறங்கூற்றுவரை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது தொடர்பாக இரண்டு கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும்' எனவும் அவர் உத்தரவிட்டார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,823.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.