Show all

அருண் ஜெட்லி விடும் கரடி! சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப்பணம் வெள்ளை ஆகி விட்டதாம்

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கறுப்புப் பணத்துக்கு எதிரான கருத்துப் பரப்;புதலை கையில் எடுத்து ஆட்சிக்கு வந்தது பாஜக. 

சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தில் ஒவ்வொருவர் கணக்கிலும் பதினைந்து இலட்சம் கிடைக்கும் என்று ஆசையை வளர்த்திருந்தது பாஜக. அவர்கள் ஆட்சிக்கு வந்து  4-வது ஆண்டில் கூட நமது கணக்கிற்கு பதினைந்து இலட்சம் வந்து சேரவில்லை.

ஆனாலும் சுவிஸ் வங்கியில் உள்ள, பாஜக மீட்பதாகச் சொன்ன பணம் தற்போது இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாம். 

அப்படியா நமது வங்கிக் கணக்கிற்கு முப்பது இலட்சம் வருமா என்று வயை பிளக்காதீர்கள்! 

இந்நிலையில், இது தொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்துள்ள நடுவண் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வைப்புத் தொகை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வங்கியில் வைப்பு செய்யப்பட்ட இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் கிடையாது. சுவிஸ் வங்கியில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து உள்நாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்நாட்டு அரசு பல நாடுகளுடன் தகவல் வெளிப்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல், (நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு) தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன். சட்ட விரோதமாக யார் முதலீடு செய்தாலும் அவர்கள் மீது இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பண சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனப் பதிவிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,834.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.