Show all

தந்தை மகள் உடல் கருகி பலி! மின்னூட்டியுடன் இணைப்பில் இருந்த நிலையில், செல்பேசி தீபற்றியதால்

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையை அடுத்த தாம்பரம் அரங்கநாதபுரம் காதர்பாய் தெருவில் வசித்து வருபவர் 90 அகவை முதியவரான ஹபிக் முகமது. இவரது மகள் மகரூர்சா.

இவர் நேற்றிரவு தனது செல்பேசியை மின்னூட்டியில் சொருகி விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென செல்பேசியல் தீப்பற்றியது.

செல்பேசியில் பற்றிய தீ அருகில் இருந்த மண்ணெண்ணெய் குவளைக்கும் பரவியது. இதனால் அருகில் படுத்திருந்த மகரூர்சா படுகாயம் அடைந்தார். இதனால் அலறி துடித்தார் மகரூர்சா. இதனைக்கண்ட தந்தை ஹபிக் முகமது அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் தீயில் சிக்கினார்.

இதில் ஹபிக் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தீயில் படுகாயம் அடைந்த மகரூர்சா தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தாம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்பேசியில் ஏற்பட்ட தீ 2 உயிர்களை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,834. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.