Show all

நகைச்சுவை நடிகர். அடுத்து கதைத்தலைவர். தற்போது இயக்குநர் தொடர்வளர்ச்சியில் யோகிபாபு

யோகிபாபு இயக்குநராக அடுத்த படியில் காலடி வைக்கவுள்ள நிலையில், அந்தப் படத்தில் கதைத்தலையாக நடிக்கவிருப்பது நயன்தாராவா? காஜல் அகர்வாலா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நகைச்சுவை நடிகராக தமிழ்த்திரையுலகில் அறிமுகமான யோகி பாபு தற்போது, முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். 

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் 19 படங்களை கைவசம் வைத்திருக்கிறார் யோகி பாபு. அந்த அளவிற்கு வேலையாக இருந்து வருகிறார் யோகிபாபு.

முன்னணி கதைத்தலைவர்களின் கால்ஷீட் கூட கிடைத்து விடுகிறது. ஆனால் யோகி பாபுவின் கால்ஷீட் கிடைப்பது குதிரை கொம்பாகிவிட்டது என காத்திருக்கின்றனர் இயக்குநர்கள். அந்த அளவுக்கு பிஸியான நடிகராகி விட்டார் யோகி பாபு.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு இயக்குநர் துறையிலும் காலடி பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்பி சவுத்ரியின் 18 ரீல் புரொடெக்ஷன் தயாரிக்கும் படத்தை நடிகர் யோகி பாபு இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்காக கதை, திரைக்கதை, வசனம் என அனைத்துக்கும் தயாராகி  வருகிறாராம் யோகி பாபு. அதோடு இந்தப் படத்தில உச்சபட்ச நடிகையான நயன்தாராவை கதைத்தலைவியாக நடிக்க வைக்கவும் கலந்துரையாடல் நடப்பதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு முன்னெடுக்கப்பட்டு இருப்பதால், நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு யோகி பாபுவின் படத்தில் நடிப்பது குறித்து நயன்தாரா முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளாவிட்டால், நடிகை காஜல் அகர்வாலை அந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற தேர்வையும் வைத்திருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. நயன்தாராவுடன் கோலமவு கோகிலா, தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ள யோகி பாபு காஜல் அகர்வாலுடன் கோமாளி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.