06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தவர் வெங்கட ராமாராவ். இவர் வழக்கம் போல் இன்று காலை கோயிலைத் திறந்து சிவநடுகல்லிற்கு பூசை செய்துள்ளார். அப்போது திடீரென தடுமாறி சிவநடுகல்லின் மீது அவர் விழுந்துள்ளார். பதறிப்போன சக அர்ச்சகர்கள் அவரை தூக்கி நிறுத்த முயற்சித்த போதும், மீண்டும் சிவநடுகல்லின் மீது விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அர்ச்சகர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கோயிலில் இருந்த கண்காணிப்பு படக்கருவியில் பதிவானதால் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகின்றது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,824.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



