Show all

ஊரடங்கு நிகழ்த்திய இப்படியொரு சோகம்! கலைத்துறையை கொண்டாடும் இந்த மண்ணில்- ஆம் ஹிந்தி மண்ணில்

ஊரடங்கு தந்த மன அழுத்தம். பேரறிமுக, ஹிந்தித் தொலைக்காட்சி, இளம் நடிகை, தூக்குப் போட்டுத் தற்கொலை. அதிர்ச்சியில் கொண்டாடிகள். அவர் ஹிந்தி சின்னத்திரை நடிகை பிரேக்சா மேத்தா.

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பேரறிமுக ஹிந்தி சின்னத்திரை நடிகை பிரேக்சா மேத்தா. அகவை 25. இவர் மேரி துர்கா, லால் இஷ்க் உட்பட சில ஹிந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். 

மும்பையில் தங்கி தொடர்களில் நடித்து வந்த இவர், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். கொரோனா ஊரடங்கு காரணமாக, பெரிய திரை மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டதால், தனது சொந்த ஊரான இந்தூருக்கு அவர் சென்றிருந்தார். கடந்த இரண்டு மாதத்துக்கு மேல் அங்குதான் இருந்தார். 

படப்பிடிப்புகள் நடைபெறாததால் வருமானம் இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தாராம். கொரோனா பாதுகாப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த அவர், வழக்கம் போல கடந்த திங்கட்கிழமை இரவும் தூங்குவதற்குச் சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர், அறையில் இருந்து வெளியே வராததால், குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். 

அவரது தந்தை கதவைத் திறந்து பார்த்தார். அப்போது அவர் மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அவரை உடலை இறக்கி அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தனது தற்கொலைக்கு முன்பு, கடைசியாக தனது சமூக வலைத்தளத்தில் ஹிந்தியில் பதிவு ஒன்றைப் வெளியிட்டுள்ளார். அதில், 'கனவுகள் மரணிப்பது மிக மோசமான பாடு” என்று குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினர் இந்தத் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இளம் சின்னத்திரை நடிகை ஒருவர், திடீரென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது நடிகர், நடிகைகள் நடுவே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரை நடிகர், நடிகைகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கலைத்துறையை கொண்டாடும் இந்த மண்ணில்- ஹிந்தி பெரிய திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக சின்னத்திரை நடிகர் மன்மீத் கிரேவால் தற்கொலை செய்திருந்தார். 

பிரபல சின்னத்திரை நடிகர் சச்சின் குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தார். கிரைம் பேட்ரல் தொடர் உட்பட பல்வேறு தொடர்களில் நடித்த ஷபிக் அன்சாரி புற்று நோய் காரணமாக மரணமடைந்திருந்தார். இப்போது இவரும் மரணமடைந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர், நடிகைகளுக்கு கலந்துரையாடல்; நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.