Show all

கொரோனா பரவலுக்கு இனி வாய்ப்பே இல்லை! கொரோனா நோயாளர்கள் நமக்கு அருகில் உள்ளார்களா என்று கண்டறிய, செயலி

நாம் கடந்த ஒருமாத காலமாக, பலவிதமான செய்திக்கட்டுரைகள் மூலம் வலியுறுத்தி வந்தது:- கொரோனா நோயாளர்களைக் கண்டு தனிமைப் படுத்திக் கொள்வதற்கான ஓர் அமைப்பு. அதைக் கொணர்ந்து விட்டது நடுவண் அரசு தற்போது. நடுவண் அரசுக்கு நமது வாழ்த்துக்கள்.

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நோயாளர்கள் நமக்கு அருகில் உள்ளார்களா என்று கண்டறிய, நடுவண் அரசின் ஆரோக்கிய சேது செயலி வெளியீட்டால், கொரோனா பாதுகாப்பின் அடுத்த படியை நாம் தொட்டிருக்கிறோம். 

கொரோனா நுண்ணுயிரித் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர் நிலை குறித்து அறியவும், அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் அளிக்கவும் ஆரோக்கியசேது என்ற புதிய செல்பேசி செயலியை நடுவண் அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதுதொடர்பாக நடுவண் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆரோக்கியசேது என்ற புதிய செயலி ஒவ்வொரு இந்தியரின் நலத்துக்கானதாகும். இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றால் தாங்கள் பாதிக்கப்படுவோமா என்பதை பொதுமக்கள் அறியலாம். 

கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் வசிப்பிடத்தை மையமாகக் கொண்டு இந்த செயலியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஆரோக்கிய சேது என்ற பெயரிலான செயலியை செல்பேசியில்; பதிவிறக்கம் செய்து நிறுவிய பின்னர், உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்;பை (ஜிபிஎஸ்) திறக்கும் போது நீங்கள் இருக்கும் இடத்தின் அருகே கொரோனா பாதித்தவர் பகுதி இருந்தால் சுட்டிக்காட்டும். மேலும், அருகில் உள்ள கொரோனா பாதிப்பு இடத்தின் தூரத்தையும் செயலி காட்டும்.

மேலும், கொரோனா தொற்றின் ஆபத்திலிருந்து விலகியிருப்பது எப்படி என்ற குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது. நமக்கு கொரோனா நுண்ணுயிரி உறுதி செய்யப்பட்டால் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருந்தால் கூட இந்தச் செயலி, நம் தரவுகளை அரசுடன் பகிர்ந்து கொள்ளும். இருப்பினும், நமது தகவல்களை மூன்றாம் நபர்களால் பார்க்க முடியாது என இதன் தனியுரிமை கொள்கை உறுதி அளிக்கிறது.
தமிழ் உள்ளிட்ட பதினோரு மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி இந்தியா முழுவதும் பயன்படுத்தலாம். அரசு-தனியார்  கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த செயலி  கொரோனா தொற்றை உறுதியாக எதிர்த்துப் போராட பொதுமக்களை ஒன்றிணைக்கும் என்றார்.

தயவு கூர்ந்து ஒவ்வொருவரும் இந்த செயலியைத் தங்கள் செல்பேசியில் பதிவிறக்கும் செய்து கொண்டு கொரோனா பரவலுக்கு எதிராக உங்களைப் ஒரு போராளியாக நிறுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் பகிர்ந்து கொரோனவிற்கு எதிரான வலிiமாயான பெரும்படையை உருவாக்குவோம். நாம் அனைவரும் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு அரசுக்கு ஒத்துழைத்தால் போதும். 21 நாட்களுக்குப் பிறகு உறுதியாக நாம் ஊரடங்கை முன்னெடுக்க தேவையில்லவேயில்லை. 

இந்தச் செயலி மூலம் உறுதியாக கொரோனா பரவலைத் தடுத்துவிடலாம். அடுத்த தேவை கொரோனாவில் இருந்து குணமளிப்புதாம். தற்போதைய நிலையிலேயே எண்பது விழுக்காடு கொரோனா குணமளிப்புக்கு இந்தியாவில் வகை செய்யப்பட்டுள்ளது. அடுத்த 20 விழுக்காடு எனப்படுவது கொரோனாவிற்கு தடுப்பு மருந்தும், விரைவான சிகிச்சைக்கான உடனடி மருந்தும் மட்டுமே. வெல்வோம்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.