இன்று ஊரடங்கு 10வது நாள். பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறோம் என்று தலைமைஅமைச்சர் மோடி தெரிவித்துள்ளார். 21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு, நாட்டு மக்களிடம் ஒரு காணொளி செய்தியைப் பகிரப்போவதாக மோடி அறிவித்திருந்தார். இதன் படி காணொளியை இன்று வெளியிட்டுள்ளார். மோடியின் அந்தக் காணொளி உரையில், இன்று ஊரடங்கின் 10வது நாள். பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறோம் மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி. வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு, உலகளவில் எடுத்துக்காட்டாகி இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு, வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் மின்கலவிளக்கு, செல்பேசி, அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடம் விளக்குகளை இந்திய மக்கள் அனைவரும் ஏற்ற வேண்டும். இந்தியாவில் கொரோனா ஒரு தீவிரமான சிக்கலாக மாறியதிலிருந்து தலைமைஅமைச்சர் இரண்டு முறை நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். மார்ச் 19 அன்று தனது முதல் உரையில், அவர் ஒரு நாள் சுய ஊரடங்குக்கும் மாலை ஐந்து மணிக்கு கைத்தட்டல் மற்றும் மணியடித்தல் உத்தரவுக்கு அழைப்பு விடுத்தார். மார்ச் 24 அன்று தனது, இரண்டாவது உரையில், கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கை அறிவித்தார். சமூக விலகலை பின்பற்றவும், ஊரடங்கு விதிகளை கண்டிப்பாக பின்பற்றவும் குடிமக்களை வலியுறுத்தி அவர் தொடர்ந்து கீச்சு செய்தார். வியாழக்கிழமை பிற்பகல் முதல்வர்களுடன் காணொளி கலந்துரையாடலில் மோடி ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு முடிவடைந்ததும், மக்களை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பற்றிய பொதுவான திட்டத்தை அவர், முதல்வர்களிடம் கேட்டறிந்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு, வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் மின்கலவிளக்கு, செல்பேசி, அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார். இது கொரோனா பரவலுக்கு எதிராக, எந்த வகையான நடைமுறை என்பதை விளக்கம் தெரிவிக்க நம்மால் இயலவில்லை. இந்தியாவின் தலைமைஅமைச்சர் என்கிற இவ்வளவு உயர்ந்த பதவியில் இருக்கிற மோடி அவர்கள், அவரைச்சுற்றி நடுவண் பாஜக அரசின் பரிவாரங்கள். பொருள் இல்லாமலா இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருப்பார்கள்? ஏதோ ஆழமான பொருள் இருக்கும் என்;;;;;;;;;;;;;;;;;றே நம்புவோமாக. இதற்கு ஏதாவது ஆழமான பொருளை இரஜினி அவர்கள் தெரிவிக்க முயல, சமூக ஊடகம் வதந்தி என்று அழிக்க, ஊரடங்கில் ஒருவகையாக பொழுது போக்க வாய்ப்பு கிடைத்தால் சரிதான்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



