மார்ச் 22ல் கைத்தட்டியும், மணியடித்தும் கொரோனாவை விரட்டும் முயற்சியை முன்னெடுக்கச் சொன்னார்கள் இந்த மோடி. அப்பொழுது எழுந்த சிரிப்பலை இன்னும் ஓயாத நிலையில், வெண்ணெய்யை தலையில் வைத்து அது உருகி வந்ததும் கொக்குக்கு கண் தெரியாது, பிடித்து சமைத்து விடலாம் கொக்கை என்கிற அடுத்த கதை. 22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் தலைமைஅமைச்சர். 22மொழிகளை ஆளும் பொறுப்பில் அமர்ந்திருக்கிற தலைமகன். அவரது நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது பேரபத்து. எந்த நேரத்தில் எங்கிருந்து தொற்றுமோ இந்தக் கொரோனா என்கிற பேரபத்து. பிப்பரவரி முதல் கிழமையில் வெளிநாட்டு விமானங்களை நிறுத்தியிருந்தால் நாட்டுமக்களை இந்தப் பேராபத்தில் இருந்து எளிமையாக காப்பாற்றியிருக்கலாம். செய்யவில்லை. மார்ச் 22ல் கைத்தட்டியும், மணியடித்தும் கொரோனாவை விரட்டும் முயற்சியை முன்னெடுக்கச் சொன்னார்கள் இந்த மோடி. அப்பொழுது எழுந்த சிரிப்பலை இன்னும் ஓயாத நிலையில், வெண்ணெய்யை தலையில் வைத்து அது உருகி வந்ததும் கொக்குக்கு கண் தெரியாது, பிடித்து சமைத்து விடலாம் கொக்கை என்கிற அடுத்த கதை அவிழ்த்து விட்டு விட்டார் நம்ம தலைமைஅமைச்சர் மோடி அவர்கள். நாளை இரவு ஒன்பது மணிக்கு மின்விளக்குகளை யெல்லாம் அணைத்துவிட்டால் கொரோனாவிற்கு கண்ணு தெரியாமல் போய்விடுவது போலவும், அந்த சமயத்தில் (காட்டுக்குள் சுமையுந்துகளின் ஓட்டுநர்கள் சுற்றிலும் வெளிச்சம் இல்லாத நிலையில் வண்டியின் விளக்கொளி பாய்ச்சி முயல் பிடித்து சமைப்பார்களே அது போல) நாலா பக்கமும் செல்பேசியின் விளக்கு அல்லது திரிவிளக்கு அல்லது மெழுகு வர்த்தியோடு ஒன்பது நிமிடம் நின்று கொரோனாவை ஏதோ பண்ணிவிடலாம் என்பது போலவும்- இந்தியாவின் தலைமைஅமைச்சர். 22மொழிகளை ஆளும் பொறுப்பில் அமர்ந்திருக்கிற தலைமகன். மீண்டும் உப்பு சப்பு பெறாத ஒரு கதையை முன்னெடுத்திருப்பது, பேருதான் பெத்த பேரு தாகத்துக்கு நீலு லேது! என்கிற தெலுங்கு மக்களின் சொலவடையை நினைவு படுத்துவதாக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் தலைமைஅமைச்சர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்;றைய நிலவரப்படி 411 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மோடி நேற்று காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு காணொளி பதிவு மூலம் உரையாற்றினார். என்ன சொல்லப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய மோடி, அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளுக்கு கீச்சுத் தளத்தில் பகடிப்படங்களை கொட்டி வருகிறார்கள் மக்கள். இந்த நிலையில் தமிழகத்தின் பகடியாடலுக்கு பெயர் பெற்ற திரைப்பட நடிகை கஸ்தூரி ஒரு கிண்டலை அள்ளி விட்டிருக்கிறார்கள். மோடி ஏற்ற சொன்ன விளக்கு குறித்து, ‘விளக்கு வைப்போம்.. விளக்கு வைப்போம்.. நாங்கள் எல்லாம் அப்பவே சொன்னது என்று கீச்சு வெளியிட்டுள்ள கஸ்தூரி அதற்கு ஆதாரமாக 1993ம் ஆண்டில் வெளியான ஆத்மா படத்தில் கஸ்தூரி நடனமாடிய ‘விளக்கு வைப்போம், விளக்கு வைப்போம். குலம் விளங்க விளக்கு வைப்போம்’ என்று பாடல் காணொளியையும் வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடல் நல்லாதானேயிருக்கு என்று, மோடியின் கொண்டாடிகள் அந்த ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணிக்கு மணியடித்து ஆர்ப்பாட்டம் செய்தது போல, நாளை இரவு 9மணிக்கும் விளக்குகளை அணைத்துவிட்டு இந்த பாடலையும் போட்டு செல்பேசி விளக்குகளை ஏற்றி மகிழ்ந்தாலும் வியப்படைவதற்கில்லை என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணா- பிற மொழி ஆதிக்கத்தால் தமிழ் நாடு இருள் சூழ்ந்த நிலையில் இருந்தபோது தன் தமிழ் மொழியின் ஆற்றலால் தமிழ் மக்களை தன் பக்கம் இழுத்தவர். சோர்ந்து கிடந்த தமிழ் உள்ளத்தில் மொழி கொண்டு உணர்வை ஊட்டிய பேச்சாற்றல் மிக்கவர். அவரின் பேச்சாற்றல் இப்படி இருந்தது. ஒருமுறை விழுப்புரத்தில் அண்ணா பேச சென்றிருந்தார். தேர்தல் நேரம் என்பதால் பல கூட்டங்களில் பேசிவிட்டு இரவு பத்து மணிக்குத்தான் அங்கு அவரால் வரமுடிந்தது. மக்கள் கண்களில் தூக்கம் குடிகொண்டிருந்தது. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
மேடையேறிய அண்ணா இப்படி பேசினார்,
மாதமோ சித்திரை!
மணியோ பத்தரை!
மக்களுக்கோ நித்திரை!
வழங்குவீர் உதய சூரியனில்
உங்கள் முத்திரை!”
என்றவுடன் மக்களின் தூக்கம் கலைந்து, எழுந்த கையொலி அடங்க வெகு நேரம் ஆயிற்று.
இப்படிப் பட்ட தலைவர்களின் வழிவந்த தமிழகத்தால்-
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
என்று சொல்லுகிற திருக்குறளுக்கு சொந்தமான தமிழகத்தால்- இந்தியாவின் தலைமைஅமைச்சர். 22மொழிகளை ஆளும் பொறுப்பில் அமர்ந்திருக்கிற தலைமகன் மோடி அவர்களின் மொக்கையான ஆலோசனைகளை பகடியாடாமல் இருக்க முடியவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



