03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டில்லியில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை, உயர்அறங்கூற்றமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் கர்ணன் தொடங்கியுள்ளார். ஊழலால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல்களின் மூலம், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய கொடுமைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பணியில், தனது தலைமையிலான ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி ஈடுபடும் என்கிறார் கர்ணன் கட்சியின் பெயர் பதிவு மற்றும் சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்துடன் தொடர்பில் உள்ளார். தமது கட்சியில் விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், தேர்தலில் போட்டியிட பெண் வேட்பாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,790.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



