14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி ஆட்சி தொடங்குவதற்கு முன்பு களத்தில் இருந்த அன்னாகசாரே தாத்தா! மோடி ஆண்டு முடியுந் தருணத்தில் மீண்டும் வருகிறார். காந்தி பிறந்த நாளில் உண்ணாநிலை இருக்கப் போகிறாராம். நான்கு ஆண்டுகள் அவர் எங்கே போனார்? நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதம் நடத்தினார். அவரது போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியதால், லோக்பால் சட்டம் உருவானது. லஞ்ச, ஊழலில் ஈடுபடும் நடுவண் அரசு பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த சட்ட மசோதா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு குடிஅரசுத் தலைவர் கையெழுத்திட்டு சட்டமாக்கினார். ஆனால், நான்கு ஆண்டுகளாக மோடி ஆட்சியில் இதுநாள் வரையில் லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை. இந்த நிலையில் லோக்பால் சட்டத்தை நடுவண் அரசு அமலுக்கு கொண்டு வராததை கண்டித்து மீண்டும் உண்ணாநிலை போராட்டம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார். நடுவண் அரசு காலதாமதம் செய்வதை கண்டித்து மீண்டும் உண்ணாநிலை போராட்டம் நடத்த இருக்கிறேன். சான்றோர் காந்தி பிறந்த நாளன்று முதல் எனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில், இந்த உண்ணாநிலை போராட்டத்தை தொடங்க உள்ளேன். ஊழல் இல்லா தேசத்தை உருவாக்க எனது போராட்டத்துடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். நாலு ஆண்டுகளா கை கோர்க்கத்தான் உங்கள நாங்க தேடிட்டு இருந்தோமே தாத்தா எங்கே போனீங்க? திரும்ப காங்கிரசு ஆட்சிக்கு வந்த எங்களோட இருப்பிங்க ; மோடி கீது ஆட்சிக்கு வந்துட்டா காணாம போயிடுவீங்களா? அட போங்க தாத்தா நீங்களும் இதுக்கெல்லாம் சரிப் பட்டு வர மாட்டீங்க தாத்தா! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,864.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



