Show all

போட்டி போடும் ஊதாரிகள்! வெளிநாடு சுற்றுலாவிற்கு இந்திய மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது மோடியா? வீணடித்தது மன்மோகன் சிங்கா

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எல்லையில்லாமல் போய் கொண்டிருக்கும் மோடியின் வெளிநாடு பயண செலவு குறித்து புலம்பாத இந்தியக் குடிமகன் யாரும் இருக்க முடியாது. 

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், இதற்காக அதிகம் செலவிடப்படுவதாகவும், காங்கிரசும் குற்றம் சாட்டி வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 36 வெளிநாடு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு உள்ளார். 155 நாட்கள் வெளிநாடுகளில் இருந்துள்ளார். இதற்காக ரூ.387.24 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

மோடியை விட குறைந்த வெளிநாடு பயணம் மற்றும் குறைவான நாட்கள் மன்மோகன்சிங் வெளிநாடுகளில் தங்கி இருந்த போதும், ஏறக்குறைய அதே அளவிலான தொகை செலவிடப்பட்டு உள்ளது. என்று நிறுவுவதற்காக பாஜக தொண்டரடிப் பொடிகள் ஏவிவிடப் பட்டிருப்பதாகவும் அதற்காக தகவல் திரட்டிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,864.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.