Show all

சோகம்! உழவர் தற்கொலை! பரபரப்பு! எட்டு வழிச்சாலைக்கான நிலம் எடுப்பால்

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதால் மனமுடைந்த உழவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் சேகர் 30 ஆண்டுகளாக அவர் தமது நிலத்தில் மல்லிகை, கம்பு, மணிலா போன்றவற்றை பயிர் செய்து வந்தார். இந்நிலையில் எட்டு வழிச்சாலை அமைப்பதற்காக சேகருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் மற்றும் இரண்டு வீடுகளை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

இதனால் மனமுடைந்த உழவர் சேகர் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். உழவர் சேகர் தற்கொலை குறித்து செங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேகர் முதலில் தமது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டதும், பின்னர் மனம் மாறி தான் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. எட்டு வழிச்சாலைக்காக நிலம் பறிக்கப்பட்டதால் உழவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எட்டு வழிச் சாலையை மக்கள் போராட்டம் தடுக்குமா? அல்லது எட்டுவழிச்; சாலை அமைந்தே தீருமா என்பதை காலம்தான் தீர்மானிக்க முடியும். எது எப்படி இருந்த போதும் இது போன்ற தற்கொலைகள் சோகமான நிகழ்வாகும். நிலம் கையகப் படுத்தும் போது, கட்டாயம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பது போலவும், உடனடியாக நிலத்திற்கு பணம். அந்தப் பணம் எவ்வளவோ அதே அளவிற்கு ஒரு தொகையை வங்கியில் பத்தாண்டுகளுக்கு இருப்பு வழங்கி வட்டியை மட்டும் பயன் படுத்திக் கொள்கிற வாய்ப்;பு. அத்தனைக்கும் மோலாக உழவர் வழங்கிய அளவிற்கான நிலம் மாற்று இடத்தில் எந்த நிபந்தனையும் இல்லாமல் கூடுதல் வாய்ப்பாக வழங்குவது போன்ற நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டேயாக வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,864.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.