Show all

மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது! ஒன்றிய பாஜக அரசின் வேளாண் துறை தொடர்பான சட்ட முன்வரைவு

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வரும் சட்டமுன்வரைவுகள் வரிசையில், இந்த வேளாண்மை முன்வரைவும் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையிலும் இன்று நிறைவேற்றப்பட்டது.

04,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான மூன்று வேளாண் சட்ட முன்வரைவுகளும் நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை காரணமாக பதிகை செய்யப்பட்டு மிக எளிதாக நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே வேளாண் சட்ட முன்வரைவுகள் இன்று  மாநிலங்களவையில் பதிகை செய்யப்பட்டுள்ளன. இந்த சட்ட முன்வரைவுகளின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டம் வேளாண் பெருமக்களுக்கு எதிரானது எனவும் திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன. எதிர்கட்சிகள் கடும் அமளியிலும் ஈடுபட்டதால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. 

அவை மீண்டும் பிற்பகல் 1.42 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளிக்கு நடுவேயும், குரல் வாக்கெடுப்பு மூலம்   வேளாண் சட்ட முன்வரைவுகள்  மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 

சட்டத்தில் இருக்கிற சந்து பொந்துக்களையும், நெளிவு சுழிவுகளையும், தனக்கு கிடைத்திருக்கிற பெரும்பான்மையையும்- வாகாகப் பயன்படுத்திக் கொண்டு ஒன்றிய அரசின் பாஜக தனது கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நேர்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு சட்டமுன்வரைவையும் கட்டமைத்து நிறைவேற்றி வருகிறது. ஒரு எல்லையில்- இந்தியா பிரித்தானியர்களின் ஆளுகைக்கு முந்தைய காலத்தில்  ரஜபுத்திரர்களின் ஆட்சியில் முன்னெடுக்கப் பட்ட வகையான மநுநீதி அடிப்படையிலான சமூகஏற்றதாழ்வு மிகுந்த அக்கால பாரதமாக மாற்றப்பட்டுவிடும்.

பாரதிய ஜனதா கட்சிக் கொள்கையின் அடிப்படைகள் இவையென இதுவரை பாஜகவின் ஆட்சி நடைமுறைகள் நமக்கு உணத்துவதாயிருக்கின்றன. 
1.பார்ப்பனிய பணியாக்களின் கையில் மட்டுமே இருக்கிற ஒன்றிய அரசில், அதிகாரத்தைக் குவித்தல், 
2.கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக திட்டமிடல், 
3.மேல்தட்டில் வராத- போதிய வாழ்மானத்தை தலைதலைமுறையாக பெறுவதற்கான கல்வி, இடஒதுக்கீடு ஆகியவற்றில் உரிமை கேட்கவும் திராணியற்று மத (ஹிந்து) அடிப்படை, மொழி (ஹிந்தி) அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட வட இந்தியர்கள் இந்தியா முழுவதும், நாடோடி பிழைப்புக்காக (வாழ்க்கை அல்ல) பரவுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருத்தல், 
4.அ.கல்வி, ஆ.இடஒதுக்கீடு, இ.அடிப்படை உரிமைகள், ஈ.அட்டவணை எட்டில் அலுவல் மொழிகளாக அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிற தமிழ் உள்ளிட்ட தங்கள் தாய்மொழிகளுக்கான அதிகாரம், உ.பொய்மைகள் மாயங்கள் ஆகியவற்றின் உச்சத்தோடு அமைந்த புரணாங்கள், இதிகாசங்களுக்கு மாறுபாட்ட எதார்த்த இலக்கியங்களைக் கொண்டிருத்தல், ஊ.மதக்கட்டுப்பாட்டுத் தளைகளை மறுதலித்து அறிவின் வழியாக இயங்குதல், மாறுபட்ட கலாச்சாரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒன்றியத்தின் மாநில அரசுகளை அதிகார அடிப்படையில் ஊர் பஞ்சாயத்துக்கள் அளவிற்கு குறுக்குதல் ஆகியனவைகள் ஆகும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.