சூர்யாவை முட்டி மோதும் முயற்சிக்கு! சூர்யாவின் உருவ படத்தை கிழித்தும், காலில் மிதித்தும் ஒரு களநிகழ்வை நடத்திட கோவையில் களமிறக்கப் பட்டன பாஜக-ஹிந்துத்துவ கொட்டடி பலியாடுகள் 05,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் மாணவர்களை மருத்துவத்தில் இருந்து அப்புறப்படுத்த நீட் என்கிற போலிமையானதகுதி தடுப்பை ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்து வருகிறது. நமக்கான தமிழ்நாட்டு அரசில் உள்ள அதிமுக- ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்து வரும் நீட் என்கிற போலிமையானதகுதி தடுப்பை தகர்த்திட முயலாத நிலையில்- நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, கல்வித்துறைக்கு முயலும் பல ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவி வரும் நடிகர் சூர்யா, நீட் தேர்வுகளைக் கண்டித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டார். அதில், நீட் தேர்வுகள் என்பது மனுநீதித் தேர்வு; கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவைப் பொசுக்கக் கூடியதாக இருக்கிறது என சாடியிருந்தார். சூர்யாவின் இந்த அறிக்கையில், அறங்கூற்றுத்துறை குறித்த விமர்சனங்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் சூர்யா மீது அறங்கூற்றுமன்ற மதிப்புக்குறைப்பு நடவடிக்;;;கை மேற்கொள்ள வேண்டும் என ஒரு நபர் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் பற்பல அறங்கூற்றுத்துறையினரின் ஆலோசனையின் அடிப்படையில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் சூர்யா மீது அறங்கூற்றுமன்ற மதிப்புக்குறைப்பு நடவடிக்;;;கை வழக்கு தேவை இல்லை முற்றுப்புள்ளி வைத்தது. நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கும் நடிகர் சூர்யாவை தனித்து வீழ்த்தும் முயற்சிக்கு ஹிந்து இளைஞர் முன்னணி என்ற தலைப்பில் சில தமிழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக. இந்தக் குழுவினர் கோவையில், சூர்யாவின் உருவ படத்தை கிழித்தும், காலில் மிதித்தும் ஒரு களநிகழ்வை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை காந்தி பூங்கா பகுதியில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் நடிகர் சூர்யாவை ஒருமையில் விமர்சித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நடிப்பை மட்டும் பாருடா சூர்யா. வேலையை மட்டும் பாருடா சூர்யா என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



