நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ் முழக்கம் பதிப்பக உரிமையாளருமான தமிழ் உணர்வாளர் சாகுல் அமீது கொரோனாவால் காலமானார். 04,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ் முழக்கம் பதிப்பக உரிமையாளருமான தமிழ் உணர்வாளர் சாகுல் அமீது கொரோனாவால் காலமானது நாம் தமிழர் கட்சிக்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது இறுதி நிகழ்வில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தலையில் அடித்துக் கொண்டு கதறிய காட்சி உருக்கமாக இருந்தது. சாகுல் அமீது, செல்வந்தராக இருந்த போதும் தமிழ் உணர்வுப் பணிகளுக்காக ஒட்டுமொத்த செல்வத்தையும் தாரைவார்த்தவர். இதனால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இறுதி காலத்தில் மருத்துவ செலவுக்குப் போராடும் சூழ்நிலைக்கு சாகுல் அமீது குடும்பம் தள்ளப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி சாகுல் அமீது காலமானார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.