இந்த முறையும் கமல் வெற்றி! அறங்கூற்றுமன்றம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தமிழ்மக்களிடம் மதிப்பை உருவாக்கியிருக்கிற மதுரை கிளையும், கமலின் தேர்தல் பரப்புரைக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது. முன்பு டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் இதே வழக்கை தள்ளுபடி செய்திருந்த நிலையில். 02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்று கமல்ஹாசன் கூறியதை எதிர்த்து பாஜக சார்பில் டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்த அறங்கூற்றுவர்கள், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என அறிவுறுத்தினர். இந்த நிலையில் தேர்தல் கருத்துப்பரப்புதல் மேற்கொள்ள கமல்ஹாசனுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தின் மதுரை கிளையில் முறையீடு செய்தார். மதுரை கிளையும் சரவணனின் மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்து அவரது மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறிவிட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,154.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.