Show all

அதீதசலுகை அல்ல, அதீதகதை; ஏமாறவேண்டாம்! ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ஆண்டுத்திட்டம், அதீத சலுகை என விளம்பரம்

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர்கள் தங்கள் எண்களை அடிக்கடி கட்டணஏற்றம் செய்யும் தொந்தரவு இல்லாமல் பயனடைய முடியும். பார்தி ஏர்டெல் நிறுவனம், தற்பொழுது ரூ.1,699 என்ற விலையில் புதிய நீண்ட கால திட்டத்தை அறிவித்துள்ளது: இது விளம்பரம். 

இத்திட்டத்தில் அன்றாடம் நூறு சேதிகள் மற்றும் அழைப்பு நன்மைகள் ஆகியவற்றைப் நீண்ட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இமாச்சலப்பிரதேச வட்டாரத்தில் இந்தத் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மிக விரைவில் அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யப்படுமென்று சொல்லப்படுகிறது. இந்த புதிய ரூ.1,699 திட்டத்தில் அன்;றாடம் 1 ஜிபி; தரவு ஒர் ஆண்டு செல்லும் காலத்துடன் வழங்கப்படுகிறது.

நடப்பில் பெரும்பாலன ஏர்டெல் வாடிக்கையாளர்கள அனுபவித்து வரும் திட்டம் 399ல் 84 நாட்களுக்கான திட்டம் இதில் இணையும் போது ரூ50 திரும்பக் கிடைத்து விடும். இதில் நமக்கு ஒரு நாளுக்கான செலவு ரூ4.15ல் மட்டுமே. 

ஆனால் இந்தப் புதிய ஆண்டுத்திட்டத்தில் ஒரு நாளைக்கு ஆன செலவோ ரூ4.65 ஆகின்றது அதுவும் நடப்புத்திட்டத்தை விட நாளொன்றுக்கு 0.4ஜிபி தரவு குறைவு. மகிழ்ச்சியாக ஏமாறுவோமா வாடிக்கையாளர்களே?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.