09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை அந்த நாட்டின் முன்னணி பணக்காரர்கள் எத்தனை பேர்கள் என்பதையும், அவர்களுடைய வருவாய் எவ்வளவு என்பதையும் வைத்து சர்வதேச முகவாண்மை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. அந்தந்த நாடுகளின் தனிமனிதனின் குறைந்த பட்ச வருமானம் என்பது இதில் கணக்கில் வராது. இந்த அமைப்பின் கணக்கெடுப்பு மோடியைப் போன்ற கார்ப்பரேட் ஆதரவாளர்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியதாகும். கடந்த ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்கள் பட்டியலுக்குள் மேலும் 18 பேர் வந்துள்ளதாகவும், எனவே கோடீஸ்வரர்கள் 119 பேராக அதிகரித்துள்ளதாகவும் ஆக்ஸ்பாம் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளொன்றுக்கு ரூ.2,200 கோடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1விழுக்காடு உள்ள நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 39விழுக்காடு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் பொது சுகாதாரத்திற்கான மொத்த வரவு, செலவு முகேஷ் அம்பானியின் 2,80,000 கோடி சொத்து மதிப்பைவிட குறைவு என ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் கூறியுள்ளது. இந்தக் கோணத்தில் பெரிய பணக்காரர்கள் உள்ள நாடு எது என்பதை ஆண்டுதோறும் சர்வதேச முகவாண்மை நிறுவனம் பட்டியல் இட்டு வருகிறது. இந்தியாவின் பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானியை மோடி வளர்த்து விட்ட காரணத்தாலும், பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையால் அமித்ஷா மகன் போன்று சிலர் குஜராத்தில் திடீர் பணக்காரர்களாக மோடி நடவடிக்கை எடுத்ததாலும், தற்போது இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது பணக்காரர்களின் வளர்ச்சி எப்போதும் அமெரிக்காவில் அதிகம், அதனால் அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2வது இடத்திலும், ஜப்பான், ஜெர்மனி தலா 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,039.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



