Show all

அத்துமீறி நுழைந்ததாக 4பேர்கள்; கைது! கலைஞரைச் சந்திக்கும் ஆர்வத்தில், முதல்வரை வீடு வரை பின்தொடர்ந்தவர்கள்

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு புறப்பட்ட முதலமைச்சர், கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து, அங்கிருந்து கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனைக்கு செல்வதாக கூறப்பட்டது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அப்போது பாதுகாப்பு வாகனங்களுடன் கூடுதலாக ஒரு கார் அவரது வீட்டிற்குள் நுழைந்தது.

இதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், காரிலிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த கோவிந்த்சிங், ரங்கதுரை, ராஜா, குன்றத்தூரைச் சேர்ந்த சதீஷ் என்ற நால்வரும், முதலமைச்சர் விமான நிலையத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு செல்வார் என்று கருதி பின்தொடர்ந்ததாக கூறினர். பாதுகாப்பு வாகனங்களை பின்தொடர்ந்தால், கலைஞரைச் சந்திக்க மருத்துவமனைக்குள் எளிதில் சென்று விடலாம் எண்ணிய நிலையில், முதல்வர் தங்கள் வீட்டிற்கு வந்து விட்டதால், தங்கள் பிரச்சனையில் சிக்க வேண்டியதாகி விட்டதாக தெரிவித்தனர். இருந்த போதும் அத்துமீறி நுழைந்ததாக 4 பேரும காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,865.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.